தேசிய கல்வி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய கற்கை நிறுவனம் தெரிவிக்கின்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டே முதலாம் தரத்திற்கான பாடத்திட்டத்தில் இறுதியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அடுத்த வருடம் முதல் புதிய பாடத்திட்டம்ட நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை, 7 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய கற்கை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டங்கள், செயற்பாட்டு ரீதியில் பிள்ளைகளை வலுப்படுத்துவதுடன், பிள்ளைகளால் கிரகிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.