தயவு செய்து வேண்டாம்- ரசிகர்ளுக்கு சூர்யா வைத்து கோரிக்கைகள்

493

சூர்யா எப்போதும் தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். இதனாலேயே இன்னும் ரசிகர்களின் மனநிலையை தெரிந்துக்கொள்ள டுவிட்டரில் இணைந்தார்.

தற்போது இவர் தயாரிப்பில் டிசம்பர் 24ம் தேதி பசங்க-2 படம் வெளிவரவிருக்கின்றது, இதற்காக இவர் ரசிகர்களிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளார்.

இதில் அவர் கூறுகையில் ‘தயவு செய்து பசங்க-2 படம் வெளிவரும் நாளில் திரையரங்கில் போஸ்டர், பேனர் வைக்காதீர்கள்.

நான் பலமுறை உங்களிடமே கூறியுள்ளேன், இதையெல்லாம் நான் விரும்பியதே இல்லை, அந்த பணத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

SHARE