2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டதை காரணம்காட்டி நுவரெலியா நகர மத்தியில் பால் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம்

287

2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டதை காரணம்காட்டி 16.12.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் நுவரெலியா நகர மத்தியில் பால் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

பால்மாவின் விலை அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டதன் பின் கால்நடை வளர்ப்பாளர்களின் ஊடாக சேகரிக்கப்படும் பால்களை உரிய கம்பனிகள் நிராகரிப்பதன் காரணமாக பண்ணையாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து 16.12.2015 அன்று 700ற்கும் மேற்பட்ட நுவரெலியா மாவட்டத்திலுள்ள பால் பண்ணையாளர்கள் நுவரெலியா நகரில் ஆர்ப்பாட்டத்ததை நடத்தினர்.

இதில் ஆர்ப்பாட்டகார்கள் பதாதைகளை ஏந்தியவாறும் தங்களது கால்நடைகளையும் அழைத்து வந்ததுடன் சேகரிக்கப்பட்ட பால்களை வீதியில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தமக்கு நீதி வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பால் பண்ணையாளர்கள் எங்களது பாலை உரிய கம்பனி நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் குறைந்து வரும் கால்நடை வளர்ப்பின் ஊடாக தற்பொழுது கால்நடை வளர்ப்பில் ஈடுப்பட்டுள்ள இந்த பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இருக்கும் பால் பண்ணையாளர்களுக்கு அரசாங்கம் உதவிகரம் நீட்ட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

SHARE