ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன் கொட்டகலை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது

306

ஆமைக் குஞ்சுகள் நான்குடன் அட்டன், கொட்டகலைச்  சேர்ந்த 58 வயது நபரை பதுளை பொலிஸார் 16.12.2015 அன்று காலை கைதுசெய்துள்ளனர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து இவ் ஆமை குஞ்சுகளை  பிடித்துள்ள அந்நபர், அவற்றை சாரமொன்றில் சுற்றி உரப்பைக்குள் போட்டவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக இவர், ஆமைக்குஞ்சுகளை பிடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

SHARE