ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சில இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எதிர்வரும் மாதம் முதல் தங்களது சம்பளங்களை குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் போரை இல்லாமல் செ;யய புலனாய்வுப் பிரிவினர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
அன்று மிலேனியம் சிட்டி சம்பவ காட்டிக் கொடுப்பினால் 97 புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களில் சிலரும் இதில் அடங்குகின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது நகைப்பிற்குரியது.
இவ்வாறு வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் மனித வேட்டை நிறுத்தப்படும் வரையில் நாம் போராடுவோம்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
இந்தப் படைவீரர்களின் சம்பளங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, அவர்குகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து குறித்த படையினருக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் சம்பளங்களை வழங்கும் யோசனை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைக்கு கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் இணக்கம் வெளியிட்டனர்.
ஹோமகம நீதிமன்றில் எக்னெலிகொட கடத்தல் காணாமல் போகச் செய்தல் தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை பார்வையிடச் சென்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது கெஹலிய இதனைத் தெரிவித்துள்ளார்.