பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் 17 பேர் இதுவரை புகையிரதம் மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று 10.30 மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போரட்டம், அனுமதி மறுக்கப்பட்டதால் புகையிரத ஓடுபாதையில் நடைபெற்றது.
பின்னர் போக்குவரத்து அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு கிளிநொச்சி புகையிரத நிலைய அதிகாரி மற்றும் மாவட்ட செயலகத்தினூடாக கண்டன மனு அனுப்பி வைக்கப்பட்டது ,