சென்னை வெள்ளத்தில் தத்தளித்த விஷயத்தை விட தற்போது வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் சிம்புவின் பீப் பாடல் விவகாரம் தான்.
சிம்பு மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாருக்கு நாளை ஆஜராகும்படி கோவையைச் சேர்ந்த காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனிடையில் சிம்பு தரப்பில் ஆஜரான வக்கீல் முத்துகுமாரசாமி, இந்த வழக்கை ரத்து செய்யவும், காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால் தடை விதிக்கவேண்டும் எனவும் கோர்க்கை மனுதாக்கல் செய்தார்.
ஆனால் சிம்பு தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த ஐகோர்ட் விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.