20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? வடமாகாண சபையினுள் நுழைந்த நபர்

325

 

யாழ்.குடாநாட்டில் கடந்த 1995ம், 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தனது சகோதரன் காணாமல்போன நிலையில் மனம் உடைந்துபோன நபர் ஒருவர் இன்றைய தினம் வட மாகாண சபைக்குள் நுழைந்து மாகாணசபை தமக்கு என்ன செய்தது? 20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? என கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இன்றைய தினம் மாகாணசபையில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்றிருந்த போது மதிய உணவுக்கான இடைவேளையின் போது குறித்த நபர் மாகாணசபைக்கு வந்து கடந்த 20 வருடங்களாக தாங்கள் காணாமல்போன தங்கள் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த மாகாண சபையில் என்ன செய்தீர்கள்?

உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தீர்கள்? எங்களுடைய குடும்பங்கள் சாப்பாட்டுக்கும் வறுமைப்பட்ட நிலையில், அரச திணைக்களங்களில் மரியாதையாக நடத்தப்படாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என முரண்பட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த நபரை ஆற்றுப்படுத்திய உறுப்பினர்கள் 20ம் திகதி  ஜனாதிபதி வரும்போது இந்த விடயம் தொடர்பாக பேசுங்கள் நாங்களும் வருகிறோம். சுட்டால் சுடட்டும் என தெரிவித்தனர்.

tamilwin.com

SHARE