வடமாகாண சபையின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் எந்தவிதமான எதிர்ப்புக்களும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் கடந்த 15ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 4 தினங்களாக நடைபெற்ற வரவுசெலவு திட்டத்தின் மீதான விவாதத்தை தொடர்ந்து இன்றைய தினம் சபையில் எவ்விதமான எதிர்ப்புக்களுமின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
குறித்த வரவுசெலவு திட்டம் கடந்த 15ம் திகதி மாகாணசபையில் முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் செயலகம் மற்றும் 5 அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதங்கள் கடந்த 4 நாட்களாக
நடைபெற்றிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண மீன்பிடி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதம் இறுதியாக நடைபெற்று
சபையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் 2016ம் ஆண் டு வரவுசெலவு திட்டத்தை சபை அங்கீகரிப்பதற்காக மாகாண கல்வியமைச்சரும், பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா சபையில் முன்மொழிந்தார்.
இதனை மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் வழிமொழிந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தமக்கும் எவ்விதமான எதிர்ப்புக்களும் இல்லை என கூறிய நிலையில் 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் சபையில் எவ்விதமான எதிர்ப்புக்களு மின்றி நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.