-நாளை மாலைக்குள் மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின், தான் தீக்குளிப்பது நிச்சயம் பாராளுமன்றத்தில் வடிவேல் சுரேஷ்

339

 

வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்படாத நிலையில், நாளைய தினத்திற்குள் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.

10338477_1473515399556916_379279696438552583_o-720x480

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையிலேயே, மலையக மக்களின் சம்பளம் அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு நாளைய தினத்திற்குள் மலையக மக்களுக்கான சம்பளம் அறிவிக்கப்படாத பட்சத்தில், தான் சபையில் தீக்குளிக்கவும் தயார் என வடிவேல் சுரேஷ் கூறினார்.

மலையக மக்களுக்கு துரோகம் விளைவித்த அனைவரையும் கட்டித் தழுவியவாறே தான் தீக்குளிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.

அனைத்து துறைகளிலும் பணியாற்றுவோருக்கான சம்பளம் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மலையக மக்களுக்கான சம்பளம் வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், நாளை மாலைக்குள் மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின், தான் தீக்குளிப்பது நிச்சயம் என பாராளுமன்றத்தில் வடிவேல் சுரேஷ் உறுதியளித்தார்.

SHARE