மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி குடும்பஸ்தர் மரணம்

331

 

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலைக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளே வாகரை கஜீவத்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதில்  குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

batty_accident_004

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த க.விவேகானந்தராசா (வயது 52) என்பவர் விபத்தில் மரணமடைந்துள்ள அதேவேளை, அவரது மனைவி ரஞ்சிதம் விவேகானந்தராசா (வயது 49) காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் வாகரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE