முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா நாமல் ராஜபக்க்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை கடுமையாக சாடி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அறியாமல் இருந்திருக்கலாம். ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஒரு தரப்புடன் தந்தை டீல் போட்டிருந்தால் அந்த தரப்பை கடைசிவரை காட்டிக் கொடுக்காத உயர்ந்த உள்ளம் கொண்ட அரசியல்வாதியாக மஹிந்த ராஜபக்க்ஷ திகழ்கின்றார்.
சுதந்திரக் கட்சி மஹிந்தவின் சொந்த சொத்து அல்ல என்பதனை நான் நன்கு அறிவேன். சுதந்திரக் கட்சி வேறு எவரினதும் சொத்து அல்ல என்பதனையும் தாம் அறிந்து வைத்துள்ளதாக நாமல் ராஜபக்க்ஷ சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.