தலைகீழாக தொங்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப 

302

 

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மனநிலையை திடப்படுத்தும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரம் mahindaகைவிட்டு போன பின்னர் முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்கு சென்று வழிப்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், 70வது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்தனவிடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது முகநூலில் (face book) பதிவேற்றியுள்ளார்.

யோகா ஆசிரியரான நந்த சிறிவர்தனவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து, நாமல் ராஜபக்ச இன்று இந்த பதிவை செய்துள்ளார். ”எனதும் எனது தந்தையின் யோக குருவான நீங்கள், எனது பிள்ளைகளின் யோகா குருவாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை“ என நாமல் ராஜபக்ச அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE