பூலோகம் – கடைசி நேரத்தில் நடக்கும் குழப்பம்

312

 

 

ஜெயம் ரவி – த்ரிஷா நடிப்பில் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் பூலோகம். இப்படம் ரெடியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டு ஆகிவிட்டது. பல தடவை வெளியீட்டு தேதி அறிவித்து தள்ளி போனது.

சமீபத்தில் இப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக 24ம் தேதி வெளியிட படுகிறது என்று ஆஸ்கார் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் அதே தேதியில் வெளியாக இருந்த வில் அம்பு மற்றும் அபூலோகம் - கடைசி நேரத்தில் நடக்கும் குழப்பம் - Cineulagamஞ்சல படம் திரையரங்கு கிடைக்காமல் தள்ளிப்போனது.

அதன் படி 24ம் தேதி சூர்யா நடிப்பில் பசங்க 2ம் மற்றும் ஜெயம் ரவிபூலோகம் வெளியாகும் என்று உறுதியானது. இந்நேரத்தில் பல பணச்சிக்கலில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சிக்கியுள்ளதால் 24ம் தேதி வெளியாவதும் சந்தேகம் தான் என்று ஒரு தரப்பு கூறுகிறது.

கடைசி நேரத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்,

 

SHARE