தவணைக் கொடுப்பனவு முறையில் ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும்!

308

 

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை தவணைக் கொடுப்பனவு முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிள் வழங்குவது தொடர்பில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் சுமார் இரண்டாயிரம் ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கான தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை ஒரே தடவையில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வசதியற்றிருப்பதால் தவணை முறையில் அதன் கட்டணத்தை செலுத்த அனுமதி கோரி மனுச் செய்துள்ளளனர்.

இதனை ஏற்றுக் கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை தவணைகட்டண அடிப்படையில் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

SHARE