முள்ளியவளை – குமுளமுனை வரையான வீதியினை புனரமைப்பது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டெனிஸ்வரன்…
முல்லைத்தீவு மாவட்ட முள்ளியவளையில் இருந்து குமுளமுனை வரை செல்லும் 13 கிலோமீட்டர் வீதியை புனரமைக்குமாறு அங்குள்ள மக்கள் கொடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக 19-12-2015 சனிக்கிழமை மாலை முள்ளியவளைக்கு நேரில் விஜயம் செய்த வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மேற்ப்படி வீதியின் தற்போதைய நிலையை அவ்வீதி வழியாக சென்று பார்வையிட்டதோடு, அடுத்த ஆண்டு தமது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக அந்த வீதியை மக்கள் போக்குவரத்துக்கு உகந்தவகையில் புனரமைத்து தருவதாக தெரிவித்தார்.