நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழக்க இதுதான் காரணம்!சொல்கிறார் மேத்யூஸ்

345

 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை அனுபவம் இல்லாத வீரர்களால் தான் இழக்க நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 2-0 என தொடரை இழந்துள்ளது.

இது பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில்,” நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருக்க வேண்டும்.

ஓரளவு ஓட்டங்கள் குவிக்கும் பட்சத்தில் தான் எங்களது பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டோம். நாங்கள் முன்னிலை பெற்றிருந்த போதும் 2வது இன்னிங்சில் சொதப்பி கோட்டைவிட்டு விட்டோம்.

இந்தப் போட்டியில் எங்களின் மோசமான 2வது இன்னிங்சிஸ் தான் எதிரணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்து விட்டது. இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது.

டெஸ்ட் அணியை எடுத்துக் கொண்டால் நாங்கள் அனுபவமற்றவர்களாக இருக்கிறோம். 5 டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக விளையாடாத வீரர்களை கூட அணியில் வைத்திருக்கிறோம்.

மேலும், அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடும் பட்சத்தில் அவர்கள் விரைவில் கற்றுக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

SHARE