மட்டு-முறக்கொட்டான்சேனை மயானத்தில் சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தர் கைது

298

 

மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நிர்மலராஜ் (வயது 32) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், மேற்படி சிறுமியை முறக்கொட்டான்சேனைப் பகுதியிலுள்ள மயானத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சிறுமி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE