பல்கலைக்கழக மாணவர்கள் இராஜாங்க அமைச்சரை வழிமறித்தனர்

344
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தினால் விஹாரமகாதேவி பூங்கா, வோர்ட் பிளேஸ் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

SHARE