முரண்பட்ட பொய்யையே அரசாங்கம் கையாள்கிறது!- வாசுதேவ நாணயக்கார

326
நாட்டின் இன்றைய அரசாங்கம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொய்யையே கையாண்டு வருகிறது என்பது முதலாளித்துவ பொருளாதார நிபுணருக்கு கூட புரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய காலம் வறுமை அதிகரிக்கும் காலமாக மாறி வருகிறது. அரசாங்கம் இது குறித்து உரிய கவனத்தை செலுத்தவில்லை.

மேலும் தேயிலை மற்றும் இறப்பருக்கு நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை. அரசாங்கம் இது சம்பந்தமாக வழங்கிய வாக்குறுதி மீறிய வாக்குறுதியாகும்.

அரசாங்கத்தை தூக்கி நிலத்தில் அடிக்கும் அளவில் இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு எதிர்ப்புகள் இருப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE