ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாசவை நீக்க வேண்டும் என பிரதமர் ரணிலிடம் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கோரியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் பிரதமரிடம் சில ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் இதனை குறிப்பிட்டுள்ளத்காகவும் அதற்கு பிரதமர் மவுனமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பிரதமர் ரணிலின் தலைமை துவத்துக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வழுத்த போது தலைமைத்துவ சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது அதன் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த தலைமைத்துவ சபையை விரைவில் கலைத்துவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படும். அதேவேளை முன்னதாக பிரதமருக்கு எதிராக செயற்பட்ட அனைவரும் லாவகமாக கட்சி அதிகாரங்களில் இருந்து ஓரம்கட்டப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.