திரையில் தான் நான் சூப்பர் ஹீரோ, ஆனால் நிஜத்தில்? பிரபல நடிகர்

300

 

சென்னை வெள்ளத்தால் சிக்கிய பலர் தற்போது இயல்பு நிலைக்கு வருகின்றனர்.

இந்த வெள்ளத்தில் சென்னையில் இருந்து பாங்காங்க் செல்ல வந்தமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் சிக்கியிருக்கிறார்.

இதுபற்றி மோகன்லால் தனது வலைப்பகுதியில் கூறியுள்ளதாவது, எனது ஃபேவரைட் சிட்டியான சென்னை, தற்போதுள்ள நிலைமையை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அதேநேரம், மனிதர்கள் வேற்றுமையை மறந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டது ஆறுதல் அளிக்கிறது.

நான் பல படங்களில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளேன். ஆனால் ஒரு வெள்ளம் என்னை எவ்வளவு பலகீனமானவன் என்பதை காட்டிவிட்டது.

மலையாள மக்களும், மலையாள ஊடகங்களும், சென்னை மக்களுக்கு பெரும் உதவி செய்துள்ளன. அவர்களுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.

SHARE