தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் போட்டி தலைவராக உள்ள டிவில்லியர்ஸ், மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியில் அசத்தக் கூடியவர்.
துடுப்பாட்டத்தை தவிர, விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். அவர் இதுவரை 23 டெஸ்டில் கீப்பராக செயல்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். இந்த நிலையில் முதுகுவலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் டிவில்லியர்ஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. |