மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் அவுஸ்திரேலியா 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.அவுஸ்திரேலியா–மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் ![]() இதில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 551 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 271 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் ”பாலோஆன்” கொடுக்காமல் 280 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 460 ஓட்டங்கள் என கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினார்கள். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 282 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ராம்தின் 59 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹொல்டர் 68 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலியா சார்பில், மிட்சல் மார்ஷ் 4 விக்கெட்டும், நாதன் லியான் 3 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. மேலும், 1995ம் ஆண்டு முதல் 2015 வரை பிராங்க் வொரல் டெஸ்ட் டிராபியைத் தக்கவைத்து அவுஸ்திரேலியா சாதனை புரிந்துள்ளது.
|