சங்கக்காரா, கிறிஸ்டியன் அதிரடி: ஹோபர்ட் அணி அசத்தல் வெற்றி

335
பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹேட் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.பிக் பாஷ் லீக் டி20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- பிரிஸ்பேன் ஹேட் அணிகள் மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹோபர்ட் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது.

சங்கக்காரா 19 பந்தில் 32 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 2 சிக்சர்), பெய்லி 21 பந்தில் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதிரடியில் மிரட்டிய கிறிஸ்டியன் அரைசதம் கடந்தார். அவர் 24 பந்தில் 56 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு தொடக்க வீரர்கள் சொதப்பினர்.

அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் கிறிஸ் லயன் சதம் அடித்தார். அவர் 51 பந்தில் 101 ஓட்டங்கள் (5 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்த வந்தவர்கள் சொபிக்கவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 9 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

இதனையடுத்து ஹோபர்ட் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சதம் அடித்த கிறிஸ் லயன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

SHARE