முதல் டெஸ்டில் இமாலய வெற்றி: தென்ஆப்பிரிக்காவை 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

363
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ஓட்டங்களும், தென்ஆப்பிரிக்கா 214 ஓட்டங்களும் எடுத்தது.

பின்னர் 89 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ரூட் (73) அரைசதம், காம்ப்டன் 49 ஓட்டங்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அதன் பின் பேட்ஸ்டோவ் அதிரடியாக 79 ஓட்டங்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 326 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் பியட் 5, வான் சைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை விட 415 ஓட்டங்கள் அதிகம் பெற்றது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு 416 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் எல்கர் 40 ஓட்டங்களும், வான் சைல் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.

அணித்தலைவர் அம்லா (12) நிலைக்கவில்லை. டுபிளசி 9 ஓட்டங்களில் நடையை கட்டினார்.

நேற்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

டிவில்லியர்ஸ் 37 ஓட்டங்களுடனும், ஸ்டெய்ன் ஓட்டங்கள் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய டிவில்லியர்ஸ் அதே 37 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

பின்னர் ஸ்டெய்ன் (2), பாவுமா (0), அபோர்ட் (2), பியட் (0), மொர்கல் (8) ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற, தென் ஆப்பிரிக்கா 174 ஓட்டங்களில் சுருண்டது.

டுமினி 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இங்கிலாந்து 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் பின் 4, மொயீன் அலி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது.

SHARE