விஜய் பட தலைப்பில் விக்ரம்!

278

விஜய் நடிப்பில் கடந்த அக்டோபரில் வெளிவந்த ‘புலி’ படத்திற்கு முதலில் ‘கருடா’ என தான் பெயரிட்டார்களாம். ஆனால் ஏதோ காரணங்களால் அதை மாற்றி ‘புலி‘ என பெயர் வைத்துள்ளனர்.

இப்போது புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ், விக்ரமின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளார். ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள ‘கருடா’ என்ற பெயரையே இந்த படத்திற்கு வைத்துள்ளனர்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தை ஜனவரியில் தொடங்கவுள்ள விக்ரம், ‘கருடா‘ படத்திற்கும் நேரம் ஒதுக்கி நடிப்பார் என கூறப்பட்டுள்ளது.

திரு இயக்கவுள்ள ‘கருடா’ படத்தின் ஹீரோயின் யார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

SHARE