நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிதியில் பெரும்பாலான பகுதி சுதேச மருத்துவத்துறையின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் மற்றைய பகுதி அரச வைத்தியசாலைகளின் அபிவிருத்தி உட்பட ஏனைய சுகாதார துறைகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன நன்கொடை நிதியினைப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை வரைந்து தருமாறு சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரமவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.