நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் மீது கனரக வாகனம் மோதியது! பாரிய சேதம்

324

 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றுடன் கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதன் காரணமாக பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவையின் 103வது ஆண்டு நிவைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கனரக வாகனம், கடந்த 28ஆம் திகதியன்று இரவு இசைக்கருவிகளை ஏற்றிச் சென்ற நிலையில் ஏ 340 விமானத்தில் மோதியுள்ளது.

இதன்போது விமானத்தின் இடதுபக்க இறக்கை பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

SHARE