தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 317 ஓட்டங்களை எடுத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சு டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. தொடக்க ஆட்டக்காரரும், அணித்தலைவருமான அலஸ்டயர் குக் (27 ரன், 49 பந்து, 4 பவுண்டரி) ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அலெக்ஸ் ஹாலஸ் 60 ஓட்டங்களிலும், நிக் காம்ப்டன் 45 ஓட்டங்களிலும், ஜேம்ஸ் டெய்லர் ஓட்டம் ஏதுமின்றியும், ஜோ ரூட் 50 ஓட்டங்களிலும் பெவிலியன் திரும்பினர். இதனை தொடர்ந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 317 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |