சம்பந்தன் 2001 இல் தோற்றார் என்பது பிழையான தகவல்.

342

 

 

2001 இல் சம்பந்தன் 40,110 விருப்பு வாக்குகள் பெற்று முதலிடத்தில் வந்தார். 1889 – 2000 காலப் பகுதியில் வி.புலிகள் கை ஓங்கியிருந்த காலம். தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு அச்சுறுத்திய காலம்.

1328525256tna5 (1)

1994 இல் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத் தேர்தலை வி.புலிகள் புறக்கணித்ததால் சொற்ப வாக்குகளைப் பெற்ற டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி 9 இருக்கைகளை வென்று நாடாளுமன்றம் சென்றது.

1994 இல் சம்பந்தனுக்கு 19,525 வாக்குகள் கிடைத்தது. மறுபுறம் கஜேந்திரகுமார் புலிகளின் ஆதரவோடு 2001 மற்றும 2004 வெற்றிபெற்றார். 2004 தேர்தலில் வி.புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாணத் தொகுதியில் புலம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் வாக்குப் போட்டதால் கஜேந்திரகுமார் 60,770 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஆனால் அடுத்து 2010, 2015 இல் 5,000 வாக்குகள் குறைவாகப் பெற்று கட்டுக்காசை இழந்தார்.

இதில் பார்க்கவேண்டிய வேறுபாடு என்னவென்றால் இரண்டுமுறை வென்ற கஜேந்திரகுமார் அடுத்து வந்த 2 தேர்தல்களில் கட்டுக் காசை இழந்தார்.

மறுபுறம் சம்பந்தன் 1989, 2000 இல் தோற்றாலும் அதன் பின் 2001,2004, 2010,2015 இல் வெற்றிபெற்றார். 2001 இல் சம்பந்தன் வெற்றி பெற்றதை தோல்வி பெற்றார் என பொய் எழுதியிருக்கிறார். இப்படிப் பொய் எழுதுவதில் அற்ப ஆசை போலும்.

40,110 வாக்குகள் எடுத்தவர் எப்படித் தோற்க முடியும்?

SHARE