ரவிராஜை கொலை செய்ய திட்டம் தீட்டிய கடற்படை புலனாய்வு அதிகாரிகள்

339
Raviraj2_0.img_assist_custom NRVehicle
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையை கடற்படை புலனாய்வு அதிகாரிகளே திட்டமிட்டு நடத்தியதாக வழக்கின் சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். ரவிராஜின் கொலை சந்தேகநபராக முன்னர் கருதப்பட்ட சம்பத் பிரிதிவிராஜ் என்பவர் தற்போது வழக்கின் சாட்சியாக மாறியுள்ள நிலையிலேயே இந்த தகவலை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.  தொடர்ந்தும் சாட்சியமளித்த சம்பத் பிரிதிவிராஜ் இந்த சம்பவத்தின் போது நான் மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விசேட பிரிவில் பணியாற்றிவந்தேன்.

இதன்போது சந்தேகநபரான பழனிசாமி சுரேஸ் என்பவருடன் எனக்கு தொடர்பு கிடைத்தது. 2006ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்த பின்னர் சுரேஸூடன் தொடர்ந்தும் உறவை நீடித்து வந்த நான் சுரேஸ் மூலம் பிரசாத் குமார, சரண் வஜிர, காமினி செனவிரட்ன, பாபியன் ரொய்ஸ்டன் மற்றும் டௌசியன்ட் உள்ளிட்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகளை தெரிந்துக்கொண்டேன்.  இதன் பின்னர் பழனிசாமி சுரேஸ் என்னை கங்காராமயவுக்கு அழைத்துசென்று கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
2006ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதியன்று பழனிசாமி சுரேஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை கொலை செய்ய முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. இதனையடுத்து நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று தம்மை பொரல்லை மயான சந்திக்கு வருமாறு சந்தேகநபரான சுரெஸ் கேட்டுக்கொண்டார்.

இதன்போது அவர்களால் எனக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொரல்ல மயான சந்திக்கு நான் சென்றபோது பிரசாத் செனவிரட்ன மற்றும் வஜிர ஆகியோர் முச்சக்கரவண்டியில் அந்த இடத்துக்கு வந்தனர்.  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் துப்பாக்கிதாரி தப்பிவந்ததும் அவரை அழைத்து செல்லவேண்டும் என்று என்னிடம் போரிக்கை விடுதது பொரல்லை மாதா வீதி சந்தியில் நிற்குமாறும் அவர்கள் தெரிவித்தனர். இதன்போது சந்தேகநபரான செனவிரட்ன கறுப்பு நிற பை ஒன்றுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் வரும்வரையில் காத்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் வந்ததும் செனவிரட்ன எதிர்திசைக்கு சென்று ரவிராஜ் மற்றும் அவரது வாகன சாரதி லச்மன் ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.  இதனையடுத்து தம்முடன் மோட்டார் சைக்கிளில் ஏறி கடற்படை புலனாய்வு அலுவலகம் அமைந்துள்ள கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தைக்கு தப்பிவந்தார். எனினும் இந்த கொலை மேற்கொள்ளப்படும் வரை அதன் விபரங்களை தாம் அறிந்திருக்கவில்லை என்றும் சம்பத் பிரிதிவிராஜ் சாட்சியமளித்துள்ளார்.  இதேவேளை சாட்சி இந்த விபரங்களை தெரிவித்தபோது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்கினார். எனினும் சந்தேகநபர்களின் சட்டத்தரணி குறுக்கு விசாரணைக்காக மற்றும் ஒரு திகதியை தருமாறு கோரினார்.

இந்தநிலையில் விசாரணையை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு மேலதிக நீதிவான் திலின பண்டார ஒத்திவைத்தார்.  முன்னர் ரவிராஜ் கொலை விசாரணையில் பழனிசாமி சுரேஸ், பிரசாத் ஹெட்டியாராச்சி, காமினி செனவிரட்ன, பிரதீப் சமிந்த, சிவகாந்த் விவேகாநந்தன், பாபியன் டௌவியன்ட் மற்றும் சம்பத் முனசிங்க ஆகிய 7 பேருக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.  இந்தநிலையில் விசாரணையின்போது சமுகமளிக்காத பழனிசாமி சுரேஸ், சிவகாந்த் விவேகாநந்தன் மற்றும் பாபியன் டெயசியன் ஆகியோருக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE