உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு

324
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட் என்று நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இதன் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அழகுக்கல் நிறுவகம் மதிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளார். இந்த மாணிக்ககல் இரத்தினபுரி பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மாணிக்ககல் சந்தையில் நீலக்கல் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. வருடத்துக்கு குறைந்தது 70மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு இந்த மாணிக்ககல் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE