இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சம்பிரதாயபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு முப்படையினராலும் இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகள் நவாஸ் ஷெரிப்புக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.