இந்திய இலங்கை வர்த்தக உடன்படிக்கையை காலதாமதம் செய்யவேண்டும் என்று இலங்கை அரச மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கப்படும் வரை இந்த உடன்படிக்கையை தாமதிக்க வேண்டும் என்று கோரி, அந்த சங்கம், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வர்த்தக உடன்படிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அடையாளம் என்பவற்றை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அது குறித்த நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்றும் அந்தக்கடிதத்தில் அரச மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கடிதத்தில் அரச மருத்துவர் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி நளிந்த ஹேரத் கையொப்பம் இட்டுள்ளார்.