மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் அடை மழை

318

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் அடை மழைபெய்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதானிப்பு நிலைய வானிலை அதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

batticaloa-rain-jauferkhan-1_0_CI
இன்றைய தினமும் காலை எட்டு மணிமுதல் முற்பகல் 11.30 மணி வரையான நேரத்தில் 24.8 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. இதனால் மக்களின் இயல்புநிலை  பாதிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், வாகரை, ஆரையம்பதி உள்ளிட்ட பல பகுதிகள் மழை வெள்ளத்தில் காணப்படுகின்றன. வீதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செவ்வாய் கிமை காலை 8.30 மணிமுதல் புதன் காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 53.6 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

SHARE