சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உண்மையானால் ஹிருணிகா கைதுசெய்யப்படவேண்டும் -விமல்

321
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகவே செயற்படுகிறது என்றால் அதன்கீழ் வரும் பொலிஸ் திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைதுசெய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

எனினும் அவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது உண்மையானால் ஹிருணிகா கைதுசெய்யப்படவேண்டும் என்று விமல் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இன்று மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் கைகளில் இல்லை. அமெரிக்கா மற்றும் இந்தியா, புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1451373642_8279016_hirunews_hirunika-premachndry

SHARE