பொலிஸாருக்கு எதிராக 604 முறைப்பாடுகள் – பிராந்திய பணிப்பாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

272
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக இதுவரை 604 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றின் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்திருக்கிறார். இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் பற்றியவை எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் முறைப்பாடுகளின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காமை அல்லது ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவையே பிரதான குற்றச்சாட்டுகளாக உள்ளன எனவும், இக்குற்றச்சாட்டுகளின் உண்மைநிலையை அறிந்துகொள்ள ஆணைக்குழுவின் பிராந்தியப் பணிப்பாளர்கள் எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

srilanka-police-logo_CI

SHARE