முதலமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு இல்லை – அமைச்சர் டெனிஸ்வரன்

298
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு எவரும் ஏற்பாடு செய்யவில்லை என்றும் அதற்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும் வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது ஒவ்வொரு கட்சிகளும் தமது கட்சிகளை வளர்க்க முற்பட்டால் எதிர்காலத்தில் தமிழீனத்தின் விடுதலை பின்னோக்கி தள்ளப்பட்டு விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை தொடர்ந்தும் கட்டியெழுப்பப்பட  வேண்டும் என்பதோடு கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் வெளியேறி வேறு கட்சிகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் தென்னிலங்கையின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும் அனைவரும் ஒன்றாக செயற்படும் பட்சத்திலே தமிழ் மக்களின் பலத்தை காட்ட முடியும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால போராட்டம் எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடை தேட வேண்டும் என்றால் தலைவர்கள் தூர நோக்கோடு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE