அனைத்து மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், இணைத்தலைவர்கள் நியமனம்

285
அனைத்து மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் மற்றும் இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்  குறித்த குழுவின் 54 தலைவர்கள் மற்றும் இணைத்தலைவர்கள் தமது நியமன கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

கடந்த காலங்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதில் உள்ளடங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல்ராஜபக்ஸ மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான ஜனக பண்டார தென்னக்கோன், பவித்ரா வன்னியாராச்சி, சுமேதா.ஜீ.ஜயசேன மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர் மாவட்ட ஒருங்கினைப்பு குழுக்களின் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒன்றினைந்த எதிர்கட்சிகளின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சந்ரசிரி கஜதீர மாத்தறை மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

SHARE