25ஆண்டுகளுக்கு முதல் நடந்த சம்பவங்களை மீண்டும் கிளறி தன்மீதும் ஈ.பி.ஆர்.எல்;.எவ் இயக்கம் மீதும் சிலர் சேறடைக்க முயற்சிக்கிறார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.