மிதவாத அரசியலினால் உரிமைகளை வெல்ல முடியும்; நோர்வே அமைச்சர் இரா.சம்பந்தனிடம் தெரிவிப்பு!

331

 

மிதவாத அரசியல் கொள்கைகளின் மூலம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நோர்வே வெளிநாட்டு அமைச்சர் போர்ஜ் பிரென்டே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் மிதவாத அரசியல் போக்கிற்கு தன்னுடைய பாராட்டுதல்களையும் நோர்வே வெளிநாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள நோர்வே வெளிநாட்டு அமைச்சர் போர்ஜ் பிரென்டேவும், இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை மாலை சந்திப்பொன்ற இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், “தமிழ் மக்கள் ஒன்றாக செயற்படுவதன் மூலமே ஒரு சரியான தீர்வை எட்ட முடியும்” என்றுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினரமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

SHARE