கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் அடுத்த 5 வருடங்களுக்கு பின்னர் என்ன செய்யப் போகின்றீர்கள் என ஊடகங்கள் உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி இந்த விடயம் தொடர்பில் பாரிய அளவில் கலந்தரையாடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி பாக்கிஸ்தான் பிரதமருடனான விருந்துபசாரத்தின் போது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதாக தெரிவித்துள்ளதொடு அடுத்த 5 வருடங்களின் பின்னர் என்ன செய்யப் போகின்றீர் என அவர் வினவியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன் பாகிஸ்தான் பிரதமரிடம், யாப்பில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக தான் தெரிவித்தாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதனை மக்களின் விருப்பின் பேரில் அவர்களின் அபிப்பிராயங்களையும், நிபுணர்களின் அபிப்பிராயங்களையும் பெற்று யாப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாக குறிப்பிட்டார்.
அத்துடன் ஐந்து வருடங்களின் பின்னர் நான் எங்கே இருக்கின்றேன் என்ற காரணத்தை விட எமது நாடு எங்கிருக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என குறிப்பிட்டுள்ளார்.
2020 இல் எமது நாடு உலகில் சிரேஷ்ட நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்காக இருக்க வேண்டும்.
எனவே எமது தனிப்பட்ட விடயங்களை கருத்திற்கொள்வதை விடவும் எமது அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் சிறந்த எதிர்காலம் மற்றும் தேசத்தின் இலக்கு என்பவற்றை இலக்காக கொண்டிருக்க வேண்டும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்தில் எமது நாடு சிறந்த அபிவிருத்தியடைந்த ஊழல் இல்லாத நாடாக அமைய வேண்டும். ஒழுக்கமுள்ள சமுதாயம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பிரதமருக்கு இராபோசனம் வழங்கினார் ஜனாதிபதி