லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள்

294
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள் கடந்துள்ளது.

7 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் கொலையுடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி காலை 10.15 அளவில் அத்திட்டிய பேக்கரி சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாம இரண்டு துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்

தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இல்ககான விக்ரமதுங்க, படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அன்றைய தினம் மதியம் 2.15 மணியளவில் மரணமடைந்தார்.

லசந்த விக்ரமதுங்கவை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரிகள் அப்போது கொழும்பில் காணப்பட்ட பல இராணுவ சோதனை சாவடிகளை தாண்டியே தப்பிச் சென்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இவ்வாறு யாருக்கு அன்று இராணுவ சோதனை சாவடிகளை தாண்டி தப்பிச் செல்ல முடியும் என்பது அனைவரும் அறிந்த இரகசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Lasantha_Wickrematunge

SHARE