கொழும்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது

280
கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 3 பேர் கொம்பனி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் வசம் இருந்த 100 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4 கிராமிற்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மாளிகாவத்தைப் பிரதேசத்தில் 321 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE