நாட்டுக்கு பொருத்தமற்ற அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை – அர்ஜூன ரணதுங்க

298
நாட்டுக்கு பொருத்தமற்ற அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு தாம் எந்த வகையிலும் ஆதரவாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்விதமான அரசியலமைப்புத் திருத்தத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையில் இன்று முற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு கொடியேற்றும் கலாச்சாரத்தை ஏற்படுத்தி நாட்டை இனவாதத்தை நோக்கி திருப்ப சிலர் முயற்சித்து வருகின்றனர் எனவும் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ranatunga

SHARE