அண்மை நாட்களாக முகநூலிலே இனவாதம் பற்றிய ஒரு மாறுபட்ட விவாதத்தையே காணமுடிகின்றது. இன்று அழிவை நோக்கி நகரும் உலகில் பல புத்திஜீவிகள் முளைத்துவிட்டார்கள் என்பதையே உணர முடிகின்றது.
இதை விளக்க நிகழ்காலமே போதுமென நம்புகின்றேன். இப்படியான புத்திஜீவிகளே நீங்கள் எங்கிருந்து இப்படியான கருத்துக்களை கேட்கிறீர்கள்…….?
இலங்கையிலே ஒரு தமிழனாக இருந்திருந்தால்
அதுவும் ஓர் சாதரண மனிதனாக இருந்திருந்தால் இந்த ஐயம் யாருக்கும் வரவே வராது.அரசியல்வாதிகளை வைத்து கணிப்பீடு செய்யாதீர்கள் யாராக இருந்தாலும். அவர்கள் உங்களுக்கு விரோதமாக எதுவும் செய்யமாட்டோம் என்று சிங்களவனுக்கு சத்தியம் பண்ணிக்கொடுத்து விட்டு அவன் போடும் பிச்சையில்தானே வயிறு வளர்க்கின்றார்கள்.
சிங்களமக்களும் தமிழ்மக்களும் ஒருபோதும் சேர்ந்து வாழவே முடியாது.
இப்படி யாராவது நினைத்தால் அவர்கள் முட்டாள்களே.
உங்கள் அனைவரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்கின்றேன் உதாரணமாக உங்களுடைய குடும்பத்திலே அப்பாவும் அம்மாவும் சண்டைபோட்டால் பிள்ளைகள் தடுப்பார்கள். அல்லது உறவினர் யாராவது தடுப்பார்கள். அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை என்றால் அப்பா தடுப்பார், அப்பாவிற்க்கும் பிள்ளைக்கும் சண்டை என்றால் அம்மா தடுப்பார் இதுதானே யதார்த்தமாக நடப்பது.
ஆனால் நடந்தது என்ன தமிழர்கள் எல்லாம் ஸ்ரீலங்கா மக்கள் என்றால் இப்படிக்கொல்ல நினைத்திருப்பார்களா….?
இன்றுவரைக்கும் எந்த சிங்கள மக்கள் என்றாவது ஒருநாள் எம்நாட்டு மக்களை நாமே ஏன் கொல்கிறோம் என்று கேட்டதுண்டா….?
அந்த மக்கள் வீதிக்கு வந்திருந்தால் அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் கொல்லப்பட்டிருப்போமா……?
தமிழ்மக்களுடைய காணிகள் வீடுகளை ஏன் இராணுவம் வைத்துள்ளது என்று இன்றுவரை யாராவது கேட்டார்களா….?
எத்தனை ஆயிரம் உறவுகள் சிறையில் வதைக்கப்படுகின்றார்கள் அவர்கள் விடுதலையை எவராவது வலியுறுத்தயதுண்டா….?
மாறாக தாங்களும் பேரூந்து பேரூந்தாக சுற்றுலாவுக்கென வந்து எம் மக்களின் இரணுவப்பாவனையிலுள்ள வீடுகளில் தங்கிப்போகிறார்கள் இன்றுவரை முகாம்களில் உள்ள எம் மக்களைப்பற்றி சிந்தித்தார்களா……?
உங்களால் தென்னிலங்கைகுப்போய் இப்படி தங்கிவர முடியுமா……?
இன்றுவரை யாழ் கொமும்பும் போக்குவரத்து செய்யும் சுமையூந்துகளால்,தமிழர் பேரூந்துகளால், (டொல்பின் வான்) இவை அனைத்தினுடைய உரிமையாளர்களால் ஒரு நாளைக்கு எத்தனை இலட்சம் ரூபாய் தெருவிலே உள்ள பொலிசார் (வழிப்பறிப்பவர்கள்) சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?
இவையெல்லாம் தமிழர் என்ற ஒரேகாரணத்திற்காகவே நடப்பது தெரியுமா……?
வீதியிலே வாகனத்தை மறிக்கும் பொலிசார் முதலிலே கேட்பது என்ன தெரியுமா……..?
(கோயத யன்னே….? நும்ப கோயத…? தெமழத சிங்களத…..?) இவற்றை அனுபவித்தவர்களுக்கே புரியும். போனைக்கூட வாங்கிப் பார்திருக்கிறாங்கள் வீதியிலுள்ள பொலிசார். யாருக்காவது தெரியுமா…?
தமிழர்களுடைய வாகனம் சிங்களப் பகுதிகளிலே விபத்துக்குள்ளானால் வாகனத்தில் ஒருபொருளுமே இருக்காது பொலிசார் இருக்கும்போதே சூறையாடப்படுவது தெரியுமா யாருக்காவது….?
ஒரு சிங்களவனுக்காவது தமிழர் பிரதேசத்தில் இப்படி நடந்திருக்கிறதா….?
இதைபற்றி சொல்லிக்கொண்டே போகலாம் அடிப்படையிலேயே அவர்கள் இனவாதிகள்.
அவர்கள் ஒருபோதும் மாறப்போவதுமில்லை மாறவும் மாட்டார்கள்.
தமிழர்களுக்கு பாதுகாப்பு தமிழீழமே அதாவது தனியான ஒரு தேசமேயாகும். யாழ் நகரப்பகுதியிலே சிங்களவர் செய்யும் அடாவடிகள் தெரியுமா யாருக்காவது.
இன்றுவரை உரிமைக்காக போராடிய எம்மை (றஸ்த்தவாதி ) என்கிறார்களே இந்த மனநிலையிலிருந்து அவர்களை மாற்றுவீர்களா………?
மாற்ற முடியுமென அவர்களை நம்புகின்றீர்களா…..?
இறந்தவன் உடலின் மேலே பாதம் வைத்தவர்கள் அல்ல தமிழர்கள்.
இறந்தவர்களை இறைவனாக வழிபடும் மரபு கொண்டவர்களே நாம்.
எத்தனை மாகான்களை விதைத்த துயிலுமில்லம் மேலே சப்பாத்துக்கால்களால் மிதிப்பவனைப் பார்த்தா மனிதாபிமானமுள்ள மனிதனாக இன்னும் நினைக்கிறீர்களா…..?
அப்படி எண்ணினால் நீங்களே முட்டாள்கள்.
எம்மவரை எம்மவரே இழிவுபடுத்தும் ஒரு மோசமான சமுதாயம் இன்று உருவாகியுள்ளது. இதைக்கண்டும் காணாதது போல் இருப்பவர்களை நினைத்துப்பார்த்தால் மனம் வேதனையடைகிறது……..?
ஒற்றுமைப்படுவானா தமிழன்….?
இல்லை நாடு நாடாய் அலையப்போகிறாயா…..?
எத்தனை நாளைக்கு நீதிக்கும், நிம்மதிக்குமாக கையேந்தி நிற்கப்போகின்றாய்….?