பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2–ந் தேதி ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து கொண்டு மூளையாக செயல்பட்டு, நடத்திய தீவிரவாதிகள் யார், யார் என்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
அவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ராவுப் அஸ்கார் மற்றும் அஷ்பாக், காசிம் ஆவார்கள்.
இவர்களில் அப்துல் ராவுப் அஸ்கார், 1999–ம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தை காட்மாண்டிலிருந்து காந்தகாருக்கு தீவிரவாதிகள் கடத்திச்சென்றதில் மூளையாக செயல்பட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இவர்கள் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர்கான் ஜன்ஜூவாவிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.