வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரி அரசு பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாவதை
முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வு
வவுனியா பிராந்திய பொலிசார் மக்கள் தொடர்பு பிரிவு ஏற்பாடு செய்த மரம் நடுகை
நிகழ்வு இன்று காலை 9.30மணிக்கு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில்
வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. இ. எம்.எம்.
ஏக்கநாயக்க. வவுனியா பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் திரு. வசந்த
விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று ஒருவருடம் பூர்த்தியாவதையிட்டு மரம் நடும்
நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 500 மரக்கன்றுகள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர்
காரியலாயம் மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களிலும் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில்
பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஊழியாத்கள் என பலரும் கலந்து கொண்டனர்