ஊடகத்துறை கற்கைநெறியினை சிறப்பாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு North Mass Media College  என்ற நிறுவனத்தினால் சான்றிதழ்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கிவைப்பு.

402

ஊடகத்துறையில் தமது திறமையினை நிரூபித்து 03 மாத கால வெகுசன ஊடக கற்கை நெறியினை (Diploma in Mass Media)  வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு 10.01.2016 இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் North Mass Media College  நிறுவனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வர்த்தக வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் சார்பாக அவரது சகோதரரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் சார்பாக அவரது பிரதிநிதியும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள், கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், ஊடகத்துறைசார்ந்த ஆர்வலர்கள், கலைஞர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்ததுடன் வடமாகாணத்தில் முதற்தடவையாக ஊடகவியல் கற்கையும், அதற்குரிய அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டமை என்பதுவும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

NORTH MASS MEDIA COLLEGE

28/3, Vairavapuliyankulam, Station Road, Vavuniya, Srilanka.

T.P- 0245615610, 0777475783

SAM_2097 SAM_2098 SAM_2100 SAM_2104

SHARE